நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’ உருவான கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. படம் 450 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்குப் பிறகு விஜய், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் படத்தின் பூஜை அக்டோபர் 3 ஆம் தேதி நடக்கவுள்ளதாகவும், முதல் நாள் ஷூட்டிங் அதற்கடுத்த நாள் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு செட்டில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.