எனக்கு தியேட்டரே வேண்டாம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

வெள்ளி, 7 ஜூலை 2017 (22:22 IST)
சமீபத்தில் நடைபெற்ற திரையரங்கு உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் பிசுபிசுத்ததற்கு முக்கிய காரணம், இந்த வேலைநிறுத்தத்தை எந்த பெரிய நடிகரும் ஆதரிக்கவில்லை. ரஜினியும் கமலும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்களே தவிர திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை



 
 
அதேபோல் விஜய் மற்றும் அஜித்தும் குரல் கொடுக்கவில்லை. விஜய் குரல் கொடுக்காததற்கு காரணம், அவர் திரையரங்கு உரிமையாளர்களால் பலமுறை மிரட்டப்பட்டு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு என்ற பெயரில் பணத்தை இழந்ததுதான் என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் தற்போது உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தை எந்த விநியோகிஸ்தர்களுக்கும் விற்காமல் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு தரப்புக்கு விஜய் ஆலோசனை கூறியுள்ளாராம். அதற்கு ஒருவேளை திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதிக்கவில்லை என்றால் நேரடியாக டிடிஎச் உள்பட டெக்னாலஜி ரிலீஸ் தான் என்று முடிவு செய்யபப்ட்டுள்ளதாம். விஜய்யின் இந்த அதிரடி முடிவு வெற்றி பெற்றால் அனைத்து பெரிய நடிகர்களும் இதே முறையை பின்பற்றுவார்கள் என்றும் இதனால் தியேட்டர்களின் கதி என்ன ஆகும்? என்பதே கேள்வியாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்