இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து, சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ், யோகிபபு, சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
ஆனால், தமிழ் சினிமா அல்லது மற்ற சினிமாவில் உள்ள நடிகர்கள் தங்களின் படங்களுக்கு அதிக விலையுள்ள உடைகளை மட்டுமே வாங்கி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் நிலையிலுள்ள விஜய் வாரிசு படத்தில் மிகப் பெரிய செல்வந்தரின் மகனாக நடிக்கும்போதுகூட எளிமையான உடைகளை தேர்ந்தெடுப்பது தயாரிப்பாளரை மட்டும் அல்ல படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.