விஜய்சேதுபதி அறிவிக்கவிருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ்: நாளை மாலை 5 மணிக்கு!

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (11:35 IST)
சமுத்திரக்கனி நடிப்பில் ஹமிம் இயக்கி வந்த ஏலே’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மாலை 5 மணிக்கு விஜய் சேதுபதி அறிவிக்க இருப்பதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது
 
சமுத்திரக்கனி நடித்து வரும் படங்களில் ஒன்று ‘ஏலே’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் ஒரு காமெடி கலந்த சமூக கருத்துள்ள படம் என்றும் இந்த படத்தின் மூலம் இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது
 
வாசுகி இசையமைப்பில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நாளை மாலை 5 மணிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டுவிட்டரில் அறிவிக்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒநாட் ஸ்டுடியோ நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது
 
இந்த படத்தை பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே சில்லுக்கருப்பட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

A sweet surprise from @VijaySethuOffl at 5PM tomorrow.
Stay Tuned !#Aelay #ஏலே@thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @wallwatcherfilm @RelianceEnt @tridentartsoffl @ynotxworld @SonyMusicSouth @SureshChandraa @DoneChannel1 pic.twitter.com/0ywW1yQW62

— Y Not Studios (@StudiosYNot) January 24, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்