3 ஆஸ்கர் விருது வென்றவருடன் பணிபுரியும் விஜய் சேதுபதி

வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (11:26 IST)
3 ஆஸ்கர் விருது வென்றவருடன் பணிபுரிய உள்ளார் விஜய் சேதுபதி. 

 
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து  இயக்கும் படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில், அய்யா என்ற கேரக்டரில் நாடக மற்றும் சினிமா நடிகராக நடிக்கிறார் விஜய் சேதுபதி. அத்துடன், 30, 50 மற்றும் 70 வயது என மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். இதில், 70 வயது கேரக்டர் தான் படத்தின்  ஹீரோ.
 
விஜய் சேதுபதியை 70 வயது முதியவராகக் காட்ட வேண்டும் என்பதற்காக, லாஸ் ஏஞ்ஜல்ஸில் உள்ள க்ரெக் கெனான் என்ற பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை அழைத்து வந்துள்ளனர். இவர், சிறந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுக்காக 3 முறை ஆஸ்கர் விருது வென்றவர். பாலிவுட்டில் ஷாருக் கான் மற்றும் ரிஷி கபூர் ஆகியோருக்கும் இவர் மேக்கப் போட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்