தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களுள் முக்கியமானவராக பார்க்கப்படும் நடிகர் விஜய் சேதுபதிக்கு நடிப்பில் அத்தனையும் கை வந்த கலை. ஹீரோவாக களத்தில் இறங்கி டூயட் பாடி ரொமான்டிக் ஹீரோவாக வலம் வருவதுடன் அவ்வப்போது வில்லனாகவும் அவதாரமெடுத்து தன் அபார நடிப்பு திறமையை பார்த்து ரசிகர்களை பிரம்மிக்க செய்திடுவார்.
அந்தவகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளிவந்த விக்ரம் வேதா, பேட்ட போன்ற படங்கள் அவரது சினிமா வாழ்க்கையை உச்சத்தில் கொண்டு நிறுத்தியுள்ளது. அதையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதையடுத்து தற்போது தெலுங்கில் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.