முதல் முறையாக சின்னத்திரையில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’… தேதியோடு அறிவித்த பிரபல தொலைக்காட்சி

வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (08:38 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பன்மொழித் திரைப்படமாக ஏப்ரல் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். விமர்சன ரீதியாக இந்த படம் பாராட்டுகளைப் பெறவில்லை என்றாலும், வசூலில் சோடை போகவில்லை.

இந்த படம் ஒட்டுமொத்தமாக திரையரங்குகள் மூலமாக 66 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். அதையடுத்து ஓடிடியிலும் இந்த படம் ரிலீஸானது. இந்நிலையில் இப்போது “KRK” என்ற பெயரில் மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படம் ஏஷியாநெட் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தமிழில் இந்த படம் தொலைக்காட்சியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்