96 படத்தின் பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டதால், 96 படம் குறித்த விமர்சனங்கள் முன்பே வெளியாகிவிட்டன. வெளியான அனைத்து விமர்னங்களுமே 96 படம் குறித்து பாசிட்டிவாகவே உள்ளன. இதனால் 96 படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்நிலையில், 96 படத்தை இன்று திரைக்கு கொண்டுவருவதில் கடன்சுமை காரணமாக சிக்கல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடன் பஞ்சாயத்துகளில் சுமார் நாலரை கோடியை தானே தருவதாக ஒப்புக் கொண்டு படம் வெளிவர உதவியிருக்கிறாராம். இதனால் திட்டமிட்டபடி இன்று படம் ரிலீஸாகி உள்ளது.