விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி வரும் நிலையில் இந்த படத்திற்கு அனுகீர்த்தி வாஸ் என்பவர் தான் நாயகி என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மிஸ் ஃபெமினா இந்தியா பட்டம் பெற்ற அனுகீர்த்தி வாஸ், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து உள்ளதை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் சேதுபதி காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.