இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் கலந்து கொண்டு கிளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தனர். .
இப்படத்தின் பூஜைக்காக விஜய் சேதுபதி வரும்போது பட்டாசு வெடித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். இதனை கண்டு அதிருப்தி அடைந்த விஜய்சேதுபதி , "இந்த விழாவுக்கு நான் வரும் போது, யாரு பட்டாசு வெடிக்கணும் என்று ஐடியா கொடுத்தாங்களோ அவர்கள் மீது மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.