ராஜ்கமல் பிலிம்ஸில் புதிதாக இணைந்த புதிய பார்ட்னர்!

சனி, 17 ஜூலை 2021 (16:45 IST)
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய பங்குதாரராக விஜய் டி வி மகேந்திரன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இன்றைய முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பது அனைவரும் அறிந்ததே. வழக்கமாக ராஜ்கமல் பிலிம்ஸில் கமல் மற்றும் அவரின் அண்ணன் சந்திரஹாசன் ஆகியோரின் பெயரே இடம்பெற்றிருக்கும். ஆனால் இப்போது கமல் பெயருடன் விஜய் தொலைக்காட்சி மகேந்திரன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதன் மூலம் அவர் பார்ட்னராக இணைந்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்