என் லட்சுமிய காணும்.. கண்டுபிடிச்சு கொடுங்க.. விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ டிரைலர்..!

Siva

வியாழன், 30 மே 2024 (18:51 IST)
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமான ‘மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரைலரில் சலூன் கடை வைத்திருக்கும் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளிக்கும் நிலையில் லட்சுமி யார் என்பதை காவல்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. கடைசிவரை லட்சுமி யார் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருக்கும் காவல்துறையினர் அடுத்தடுத்து நடக்கும் சம்பவத்தால் அதிர்ச்சி அடைகின்றனர்.

இந்த ட்ரெய்லரில் விஜய் சேதுபதி லேசாக மனநலம் குன்றியவராக நடித்திருப்பார் என்றும் அதே நேரத்தில் அதிரடி ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி உள்ளார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ், பாரதிராஜா, அபிராமி, சிங்கம் புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர்  நடித்துள்ளனர். நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.


Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்