ஓரம் போ புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கேங்ஸ்டராகும் விஜய் சேதுபதி

புதன், 14 ஜனவரி 2015 (14:20 IST)
நியூ ஜெனரேஷன் இயக்குனர்கள் என்று புஷ்கர் - காயத்ரியை சொல்லலாம். வாழ்வின் அபத்தங்களை பேசியவை இவர்களது ஓரம் போ மற்றும் வ - குவாட்டர் கட்டிங் படங்கள். 


 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த இயக்குனர் தம்பதிகள் படம் இயக்குகிறார்கள். விக்ரம் - வேதா என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் போலீஸ் என்கவுண்டர் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படமாக இருக்கும். இதில் விஜய் சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார்.
 
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் படத்தை தயாரிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்