முதல்வரின் பயோபிக்கில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி?

வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:06 IST)
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி லீடர் ராமையா என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் சில மாதங்களாக நடந்து வந்தன.

ஆனால் அந்த படத்தில் சித்தராமையாவாக நடிக்கப் போவது யார் என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதற்கான நடிகர் தேடும் முயற்சி நடந்து வந்த நிலையில் இப்போது விஜய் சேதுபதியிடம் அந்த படத்தில் நடிக்க அனுகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

அவரும் அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கதலோகனா படத்தை இயக்கிய சத்யா ரத்னம் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக அரசியல் தலைவர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகளவில் உருவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்