ஜனவரியில் விஜய்யின் புதுப்படம், அட்லி இயக்குகிறார்

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (13:12 IST)
பரதன் இயக்கத்தில் பைரவா படத்தில் விஜய் நடித்து வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. 2017 பொங்கலுக்கு படத்தை வெளியிடுகின்றனர்.

 
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளார். பலரிடம் கதை கேட்டு இறுதியில் அட்லியை இயக்குனராக ஒப்பந்தம் செய்துள்ளனர். அவர் விஜய்யை மீண்டும் இயக்குவது உறுதியாகியுள்ளது.
 
2017 ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்