விஜய்யின் மெர்சல் படத்தின் வைரலான புகைப்படம் இதோ!

செவ்வாய், 4 ஜூலை 2017 (16:30 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். மெர்சல் பட தகவல்கள் ஏதாவது அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது.

 
 
இந்த நிலையில் இயக்குனர் அட்லி ஒரு குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் பின்புறம் பார்த்தால் விஜய் ஒரு மைக் முன்பு நின்று பேசுவது போல் இருக்கிறது. அதில் மொட்டை ராஜேந்திரனும் இருக்கிறார். நம் தேசிய கொடியும், அதோடு இன்னொரு கொடியும் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்தால் விஜய் மெர்சல் படத்தில் அரசியல் வாதியாக நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
 
இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடித்திருப்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்