விஜய், ஜெயம் ரவி கூட்டணியில் வனமகன்!!

திங்கள், 12 டிசம்பர் 2016 (14:22 IST)
ஜெயம் ரவி மற்றும்  ஏ.எல் விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதியப் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 
'ரோமியோ ஜூலியட்' புகழ் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'போகன்' திரைப்படம் வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 
 
இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் படத்துக்கு 'வன மகன்' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் ரவி பழங்குடியின இளைஞராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக சாயிஷா சைகல் நடித்திருக்கிறார்.
 
இப்படத்தின் கதை காடுகள் பின்னணியில் உருவாகும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக சாயீஷா சாய்கல் நடிக்கிறார், மேலும், தம்பி ராமையா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்