இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திற்கு மட்டும் ஆயிரம் தியேட்டர்கள் தமிழகத்தில் கொடுக்கப்பட்டதாகவும் திரையரங்கு உரிமையாளர்களை மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் திரையரங்குகள் தருகிறோம் என்றும், வேறு எந்த படத்திற்கும் தரமாட்டோம் என்று கூறியதாகவும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வருகின்றனர்
உண்மையில் அப்படி எந்த உத்தரவாதத்தையும் திரையரங்கு உரிமையாளர்கள் தரவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. அனைத்து நடிகர்களின் படங்களும் எங்களுக்கு தேவை என்றும் மாஸ்டர் என்ற ஒரு படத்திற்கு மட்டும் ஆயிரம் தியேட்டர்கள் கொடுக்க முடியாது என்றும் ஈஸ்வரன், ஜகமே தந்திரம், சுல்தான் ரிலீஸ் ஆனால் அந்தப் படத்திற்கும் நாங்கள் அதிக அளவில் தியேட்டர்கள் கொடுப்போம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது