கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் படங்களில் அதிக வரவேற்பைப் பெற்ற படமென்றால் அது 96 தான். ரிலிஸுக்கு முன்னர் பல சிக்கல்களைக் கடந்து திரையரங்குகளுக்கு வந்த 96 படம், ரிலிசுக்குப் பின் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படமான 96 படம் வழக்கம்போல இளைஞர்களை மட்டும் கவராமல் கல்யாணம் ஆகி தனது மத்திய வயதுகளில் இருக்கும் 70ஸ் மற்றும் 80ஸ் கிட்ஸ்களையும் கவர்ந்ததால் தியேட்டர்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே இருக்க தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.