புவியில் நமது ஆட்சி நடக்கும் தலைவா: விஜய் ரசிகர்களின் புத்தாண்டு போஸ்டர்!
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:52 IST)
புவியில் நமது ஆட்சி நடக்கும் தலைவா: விஜய் ரசிகர்களின் புத்தாண்டு போஸ்டர்!
புவியல் நமது ஆட்சி நடக்கும் தலைவா என விஜய் ரசிகர்கள் புத்தாண்டு தின வாழ்த்துக்களுடன் போஸ்டர் அடித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் குறித்து அவரது ரசிகர்கள் சர்ச்சைக்குரிய போஸ்டர்களை ஒட்டி வருவது வழக்கமாக இருந்து வருகிறது
இந்த நிலையில் கோவை நகரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அடித்துள்ள போஸ்டரில் 2022ஆம் ஆண்டு துவக்கம் எனவும் புவியியல் நமது ஆட்சி நடக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் விரைவில் நமது ஆட்சி நடக்கும் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது