விஜய் தேவரகொண்டாவிடம் 9 மணிநேரம் நடந்த விசரணை… லைகர் பட சிக்கல்!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (15:52 IST)
விஜய் தேவரகொண்டா- இயக்குனர் பூரி ஜெகன்னாத் – தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இந்த படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் ரிலீஸூக்கு பின்னர் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லைகர் தோல்வியால் விஜய் தேவரகொண்டா- பூரி ஜெகன்னாத் கூட்டணியில் உருவாக இருந்த JGM என்ற படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் லைகர் படத்தின் தயாரிப்பில் ஹவாலா பணம் முதலீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து படத் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு கட்டமாக பட நாயகன் விஜய் தேவரகொண்டாவிடமும் 9 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்த பின்னர் பேசிய விஜய் தேவரகொண்டா “பிரபலமாக இருப்பதால் சில பிரச்சனைகள் சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். இதுவும் ஒரு அனுபவம்தான். அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் அளித்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்