ரவுடி நடிகருடன் பர்த்டே கொண்டாடும் ரவுடி பேபி!!

வியாழன், 9 மே 2019 (13:55 IST)
நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை சாய்பல்லவியும் தங்களது பிறந்தநாளை ஒரே தேதியில் இன்று கொண்டாடுகின்றனர். 
 
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் மூலம் தமிழகத்தில் பிரபலமானார். அதே போல தமிழ் பெண்ணாக இருந்தாலும், மலையாள படமான பிரேமம் படத்தின் மூலம் சாய் பல்லவி தமிழில் பிரபலமானார். 
 
அதன் பின்னர் விஜய் தேவரகொண்டா நோட்டா என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சாய் பல்லவி தியா எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்போது இருவரும் அடுத்தத்து பல படங்களில் நடித்து வருகின்றனர். 
இன்று இவர்கள் இருவரும் தங்களது பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். ரவுடி என செல்லமாக ரசிகர்களால் அழைப்படும் விஜய் தேவரகொண்டாவிற்கும், ரவுடி பேபி சாய் பல்லவிக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் டிவிட்டரில் #HBDVijayDevarakonda, #HBDSaiPallavi என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்