அல்லு அர்ஜுன் ஸ்டைலை காப்பி அடித்த விஜய்

சனி, 20 அக்டோபர் 2018 (18:09 IST)
தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டீசர் நேற்று மாலை வெளியாகிய பல சாதனைகளை படைத்து வருகிறது. 
 
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து 3 வது முறையாக சர்கார் படத்தில் இணைந்துள்ளனர். கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர். 
 
படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அரசியல் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். விஜய்யின் அரசியல் வெளிபாடு டீஸரிலும் பார்க்க முடிந்தது. 
 
டீஸரில் வசனங்களுக்கு அடுத்து கவனத்தை ஈர்த்தது சண்டைகாட்சிகள்தான். அதில் ஒரு குறிப்பிட்ட சண்டைக்காட்சி தெலுங்கு படமான டிஜே-வில் அல்லு அர்ஜூன் ஏற்கனவே இருந்துள்ளது என நெட்டிசன்கள் அந்த வீடியோவையும், புகைப்படத்தையும் வெளியிட்டு வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்