பீஸ்ட் சிங்கிள் தமிழ் மற்றும் அரபு மொழியில்… அனிருத் பரபர பிஸி!

புதன், 6 அக்டோபர் 2021 (10:28 IST)
தளபதி 65 ஆவது படமான பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் ரிலிஸாக உள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு மூன்று கட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்காம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் தீபாவளிக்கு பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்த பாடல் பணிகளில்தான் இப்போது அனிருத் ஈடுபட்டு வருகிறாராம். இந்த பாடல் தமிழ் மற்றும் அரபு ஆகிய மொழிகளில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்