சுசீந்தரனின் அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான்!

வியாழன், 20 ஜனவரி 2022 (11:02 IST)
சுசீந்தரன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் படத்தை திட்டமிட்ட படி இயக்கும் முடிக்கும் இயக்குனர்களில் சுசீந்தரனும் ஒருவர். கொரோனா லாக்டவுன் காலத்தில் கூட மூன்று படங்களை இயக்கி கோலிவுட்டையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, பிரபுதேவா ஆகியோருக்கு பிறகு அதிக படங்களில் நடிக்கும் கதாநாயகன் விஜய் ஆண்டனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்