விஜய் ஆண்டனி தற்போது ஒரே நேரத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதில் பிச்சைக்காரன் 2 படத்தில் அவர் நடித்து வருவதோடு இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை திரைப்படமும் ஒன்று. இவர் இதற்கு முன் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான விடியும் முன் என்ற திரைப்படத்தை இயக்கியவர். பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தயாரித்துள்ள இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட 40 கோடிக்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக சொல்லபடுகிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் படக்குழுவினரோடு இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய நடிகர் விஜய் ஆண்டனி “எப்பொழுதும் ஒரு படத்தின் முழு பொறுப்பும் இயக்குனர் உடையதுதான். அவருக்கு துணையாக இருப்பவர்கள்தான் என்னைப் போன்ற டெக்னீசியன்கள். இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி சினிமாவுக்குக் கிடைத்திருக்கிற தரமான இயக்குனர். அது கொலை படத்தைப் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும். இந்த திரைப்படம் ஒரு உலகத் தரமான திரைப்படம்.” எனக் கூறியுள்ளார்.