’பிச்சைக்காரன் 2’ படம் எப்படி? ட்விட்டர் விமர்சனங்கள்..!

வெள்ளி, 19 மே 2023 (08:11 IST)
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் நேற்றே அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளத்தில் படம் குறித்த விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
 
 பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் இது இல்லை என்றும் தனியான கதை என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் மிகவும் மோசமாக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாகவும்  மிகவும் குறைந்த பட்ஜெட்டில் தரமற்ற படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். 
 
திரைக்கதை மிகவும் மோசமாக உள்ளது என்றும் எந்த ஒரு காட்சியும் ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர் அதே நேரத்தில் ஆண்டி பிகிலி என்ற ஐடியா மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் சில கூறி வருகின்றனர்
 
 பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் இந்த படம் ஒரு ஏமாற்றமாக இருக்கும் என்றும் விளம்பரம் செய்யப்பட்ட அளவிற்கு படத்தின் தரம் இல்லை என்றும் கூறி வருகின்றனர். மொத்தத்தில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் ரசிகர்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்