இத விட சிறந்த combo கிடைக்காது… விக்னேஷ் சிவன் பகிர்ந்த viral புகைப்படம்!

வியாழன், 31 மார்ச் 2022 (13:59 IST)
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்புத் தளப் புகைப்படம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து  இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இந்த படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இப்போது ரிலீஸுக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் நயன்தாரா சமந்தாவுக்கு கேக் ஊட்ட விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் இருக்கின்றனர். மேலும் அந்த புகைப்படத்தோடு ‘ இது சாத்தியாமனதிற்கு கடவுளுக்கு நன்றி. அசாத்திய இதைவிட ஒரு சிறந்த காம்பினேஷனை நாம் உருவாக்க முடியாது. இந்த படத்தின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் மறக்க முடியாத அனுபவம். அனைவருக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்