லைகா தயாரிப்பில் எம் ஜி ஆர் டைட்டிலில் விதார்த் & யோகி பாபு நடிக்கும் புதிய படம்

சனி, 27 ஆகஸ்ட் 2022 (09:12 IST)
நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்களிலோ துணை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவர் விதார்த். மைனா படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிய அவர் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாகவும் நடித்தார். ஆனால் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய வெற்றி பெறாததால் இப்போது மீண்டும் வில்லன் வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது லைகா நிறுவனம் தயாரிப்பில் விதார்த், யோகி பாபுவோடு இணைந்து ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் செழியன் இயக்கியுள்ளார். படத்துக்கு எம் ஜி ஆரின் பழைய ஹிட் பட டைட்டிலான ‘குடியிருந்த கோயில்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்