அறுபது வயது பாட்டியாக பயமுறுத்தப் போகும் வேதிகா

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:54 IST)
ஊத்துக்குளி வெண்ணையாக இருக்கும் வேதிகாவை இயக்குனர்கள் ஏன்தான் இப்படி கரி பிடித்த எண்ணைய் சட்டியாக கையாள்கிறார்களோ? பரதேசி படத்தில் கறுப்பு தார் அடித்து வேதிகாவை அலங்கோலமாக்கினார் பாலா.

அறிமுக இயக்குனர் விக்டர் ஜெயராஜ் வேதிகாவுக்கு தந்திருப்பது அறுபது வயது கிழவி வேடம்.
 
பிரபுதேவா தயாரிப்பில் விக்டர் ஜெயராஜ் இயக்கும் வினோதன் படத்தில் வேதிகா நாயகி. என்ன மாதிரி படம் என்று கேட்டால், சைக்கலாஜிகல் ரொமான்டிக் த்ரில்லர் என்று புதுவகை பெயர் சொல்கிறார்கள்.
 
இதில் வேதிகா வெண்ணைய் வேதிகாவாகவே வருகிறார். சில காட்சிகளில் மட்டும் மேக்கப் உதவியோடு அறுபது வயது முதியவராக காட்டயிருக்கிறார்கள்.
 
இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக பயிற்சி பட்டறையில் எல்லாம் கலந்து கொண்டு நடிப்புப் பயிற்சி எடுத்து வருகிறார்.
 
பயமுறுத்தாம விடமாட்டாங்க போல.

வெப்துனியாவைப் படிக்கவும்