வேற லெவல் விஷூவலில் 'தளபதி 61: ரசிகர்கள் குஷி

செவ்வாய், 23 மே 2017 (23:47 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. அழகிய மலை, ரம்மியமான ஆறு, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் விஜய், காஜல் அகர்வால் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம்.



 


இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான அழகிய லொகேஷன்களில் இந்த பாடல் காட்சி உருவாகி வருவதால் இந்த பாடல் காட்சியின் விஷூவல் வேற லெவலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் காஜல் அகர்வாலின் போலந்து புகைப்படங்கள் சில டுவிட்டரில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களின் கொள்ளை அழகு படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் காஜல் அகர்வால் கடந்த சில மாதங்களாக அஜித்துடன் 'விவேகம்' படத்திற்காக ஐரோப்பிய நாடுகளில் நடித்த நிலையில் தற்போது விஜய்யுடன் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் நடித்து கொண்டிருப்பதால் அவருக்கு கிடைத்த இரட்டை அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்