வெந்து தணிந்தது காடு ரிலிஸ் எப்போது? வெளியான அப்டேட்!

திங்கள், 4 அக்டோபர் 2021 (10:16 IST)
நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு தனது திரையுலக வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் இருக்கிறார். இதையடுத்து அவர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் அடுத்து அவர் நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்புக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதையடுத்து இந்த படத்தை விரைவில் முடித்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்ற முடிவில் உள்ளதாம் படக்குழு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்