தமிழில் ரீமேக்காகும் வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ்

சனி, 30 ஆகஸ்ட் 2014 (18:38 IST)
ஆந்திராவில் வெற்றி பெறும் தெலுங்குப் படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்படுவது புதிது அல்ல. ஆனால் பெரும்பாலும் ஆக்ஷன் படங்கள்தான் அப்படி தமிழில் தழுவப்படும்.
 
இந்தமுறை காமெடிப் படம் ஒன்றை முயற்சி செய்கிறார்கள்.
 
ஆந்திராவில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்ற நகைச்சுவைப் படம் வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை அதர்ஷா சித்ராலயா என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்கள் ஆதியை வைத்து இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.
 
ஆதி காமெடிப் படத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. மேலும், ஆதி நடித்து வரும் யாகாவாராயினும் நாகாக்க படத்தையும் இந்நிறுவனமே தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்