சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ சென்சார் தகவல்!

திங்கள், 12 செப்டம்பர் 2022 (20:39 IST)
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் சென்சார் தகவல் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ்க்கு தேவையான பணிகள் அனைத்தும் முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர். 
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு சித்தார்த்தா ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்