பாசிட்டிவ் ரிசல்ட் எதிரொலி: வேலைக்காரனுக்கு அதிகரிக்கும் தியேட்டர்கள்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (23:32 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு ஊடகங்களும், சமூக  வலைத்தள பயனாளிகளும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்

அதே நேரத்தில் 'வேலைக்காரன்' படத்துடன் வெளிவந்த சந்தானம் நடித்த 'சக்க போடு போடு ராஜா' திரைப்படத்திற்கு சுமாரான ரிசல்ட்டே கிடைத்துள்ளது

இந்த நிலையில் நாளை முதல் சென்னையில் வேலைக்காரன் திரைப்படத்தின் தியேட்டர்கள் அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது விஜய்யின் 'மெர்சல்' ரிலீஸான திரையரங்குகளின் எண்ணிக்கைக்கு இணையாக 'வேலைக்காரன்' படமும் நாளை முதல் ஓடும் என்று கூறப்படுகிறது.

ரஜினி, கமலை அடுத்து சுமார் 50 படங்களுக்கும் மேல் நடித்து பெற்ற அஜித், விஜய்யின் புகழை சிவகார்த்திகேயன் பத்தே படங்களில் பெற்றுவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்