அஜித் நடித்து வரும் ஏகே 61 என்ற படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் தனது பகுதியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பிரபல நடிகர் வீரா தனது இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த மனிதருடன் சில நாட்கள் பழகிய பிறகு நல்ல தோற்றமும், நல்ல குணமும் மட்டுமே அவரை இந்த உயரத்தில் வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்தேன். பலவருட ரத்தம், வியர்வை, மரியாதை, கடும் உழைப்பு, ஆர்வம், நேர்மை, நம்பிக்கை போன்றவையே அவரை மகத்தான நட்சத்திரமாக மாற்றியுள்ளது.