கடல் மேல் ஊஞ்சல் கட்டி ஆடும் நடிகை! கவனத்தை ஈர்த்த புகைப்படம்!

வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (15:20 IST)
நடிகை வேதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் தன்னுடைய சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த வகையில் இப்போது கடல் மேல் ஊஞ்சல் கட்டி விளையாடுவது போல நீச்சல் உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்