முதல்முறையாக சரத்குமாருடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி

ஞாயிறு, 18 பிப்ரவரி 2018 (12:45 IST)
கோலிவுட் திரையுலகில் சுப்ரீம் ஸ்டாராக உள்ள சரத்குமார், தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் 'பாம்பன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பழமையும் புதுமையும் கலந்த ஒரு கதை என்று கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கின்றார். இவர் தனது தந்தையுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுதான். இந்த படத்தில் இவர் ஹீரோயின் இல்லையென்றாலும் அதிரடி சண்டைக்காட்சிகளுடன் கூடிய அட்டகாசமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
 
தந்தையுடன் நடிப்பது குறித்து வரலட்சுமி கூறியபோது, 'அப்பாவுடன் இணைந்து நடிப்பது மிகவும் உற்சாகமாவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்றும், படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
 
எஸ்.எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ்.கே.சங்கரலிங்கம் தயாரிக்கும் பாம்பன் பட்த்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ளார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம் வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்