சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் தெரிவித்தார்.
முன்பே விஜய் தனது டப்பிங்யை முடித்து விட்டார் என்று படக்குழு அறிவித்தது. அதிலும் ஏழு நாட்களில் முடித்துள்ளார் என்றும் கூறியது.
தற்போது வரலஷ்மி சரத்குமார் தனது டப்பிங் முடிந்தது என டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இப்படத்தில் பணி புரிந்தது சந்தோஷமாக உள்ளது. அமைதியான மற்றும் சிறந்த இயக்குநர் என்றும், உங்களுடன் இப்படத்தில் பணி புரிந்தது, இந்த வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.