கடந்த சில நாட்களுக்கு முன் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இணைந்த புகைப்படம் வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி, ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும், "மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற தலைப்பில் கொண்ட இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, வனிதா விஜயகுமார் இயக்க இருப்பதாகவும், அவரது மகள் ஜோவிதா இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.