வணங்காமுடியில் போலீசாக நடிக்கும் சிம்ரன்

வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (17:31 IST)
செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடித்துவரும், வணங்காமுடியில் போலீசாக சிம்ரன் நடிக்கிறார்.

 
திருமணத்துக்குப் பிறகும் நாயகியாக நடிக்க சிம்ரன் பெரு முயற்சி செய்தார். ஆனால், அக்கா, அண்ணி வேடங்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. இந்நிலையில், வணங்காமுடியில் வெயிட்டான ஒரு வேடம் தந்துள்ளார் செல்வா.
 
அரவிந்த்சாமியுடன் ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி என்று மூன்று நாயகிகள் வணங்காமுடியில் நடிக்கின்றனர். கூடுதலாக  இப்போது சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தில் அவர் போலீசாக நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்