அஜித்தால் கால தாமதமாகும் " வலிமை" - போனி கபூர் வருத்தம்!

செவ்வாய், 12 நவம்பர் 2019 (17:42 IST)
அல்டிமேட் ஸ்டார் தல அஜித் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் – போனி கபூர் கூட்டணியில்  "வலிமை" படத்தில் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கவிருக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்பட்டது. 
அண்மையில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. மேலும் , நவம்பர் முதல் வாரத்திலே வலிமை படப்பிடிப்பு  டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தது. ஆனால்,  தற்போது  வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் எதுவுமே தொடங்கவில்லை. இதனால் அப்டேட்டுகள் இல்லாமல் தவித்து வரும் அஜித் ரசிகர்கள் படப்பிடிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டு பட குழுவினரை டார்ச்சர் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது ரசிகர்களின் நச்சரிப்பை தாங்க முடியாத தயாரிப்பாளர் போனி கபூர் படப்பிடிப்பு பற்றிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, "வலிமை" படத்தின்  படப்பிடிப்பு கால தாமதம் ஆனது உண்மை தான். ஏனென்றால், இப்படத்தில் அஜித்தின் கதாபாத்திரத்தில் நிறைய வேலைகள் மெனக்கெடவேண்டியுள்ளது. அஜித்தும் தனது கேரக்டருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். அதனால்,  கொஞ்சம் நேரமெடுக்கிறது என கூறினார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதால் அஜித்  தனது உடல் எடையை குறைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்