’வலிமை’ ஓவர்சீஸ் ரிலீஸ் உரிமை இந்த நிறுவனத்திற்குத்தான்!

வெள்ளி, 17 டிசம்பர் 2021 (19:22 IST)

அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 
வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மதுரை அன்பு பெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் மற்ற மாநில ரிலீஸ் உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் வலிமை படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்டர்ஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து அறிவித்துள்ளது
 
மேலும் அதிக திரையரங்குகளில் ’வலிமை’ திரைப்படத்தை வெளியிட முயற்சிகள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்