இந்நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத வடிவேலு வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் இப்போது நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பல்வேறு துறையினர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குழுவினர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி என அது சொல்லப்படுகிறது.
அப்போது பேசிய வடிவேலு நீங்கள் எல்லாம் ஒரு வருடமாகதான் லாக்டவுனில் இருக்கிறீர்கள். ஆனால் நானோ 10 வருடமாக இருக்கிறேன். என் உடம்பில் இப்போதும் தெம்பும் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை. என பேசினாராம். அதே போல சோகத்தோடு கர்ணன் படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் பாடியதாக சொல்லப்படுகிறது.