உத்தம வில்லனில் கமலின் புதிய கெட்டப்

புதன், 19 நவம்பர் 2014 (09:03 IST)
உத்தம வில்லன் படத்தில் உத்தமன் என்ற சரித்திரகால நாடக நடிகராகவும், நிகழ்கால சினிமா சூப்பர் ஸ்டாராகவும் கமல் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.
 
நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதால் படத்தில் விதவிதமான கெட்டப்புகளில் கமல் தோன்றுகிறார். அதில் ஒரு கெட்டப்பின் புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் ராஜா உடையில் கமல் கம்பீரமாக தோன்றுகிறார்.
 
ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி நாயர், பார்வதி மேனன், பாலசந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை.
 
படம் ஜனவரியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்