அடர்ந்த காட்டில் படமான உறுமீன் கிளைமாக்ஸ்

திங்கள், 26 ஜனவரி 2015 (19:20 IST)
சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் உறுமீன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
 
ஜிகிர்தண்டா படத்துக்குப் பிறகு சிம்ஹாவின் ஸ்டார் அந்தஸ்து உயர்ந்துள்ளது. சில படங்களில் நாயகனாக நடிக்கிறார். அதில் முதலில் உறுமீன் திரைக்கு வருகிறது.
ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பெருமாள் சாமி இயக்கியுள்ளார். ஹீரோயினாக நடித்திருப்பவர் ராஷ்மி மேனன். மெட்ராஸ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கலையரசன் இதில் வில்லனாக நடித்துள்ளார்.
 
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கேரளாவில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளில் படமாக்கியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்