கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் ரியோ, ரம்யா பாண்டியன், கிரண், சஞ்சனா, புகழ், ரக்சன், உள்பட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பதும் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் இருவருக்கு சற்றுமுன் கொரோனா பாசிட்ட்வி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து பத்தாம் தேதி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகாது என்றும், ஒரு வாரம் கழித்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது