அட்லீ – ஷாரூக்கான் இணையும் படத்தின் தலைப்பு இதுவா? – ட்விட்டரில் ட்ரெண்டிங்!

வியாழன், 16 செப்டம்பர் 2021 (12:06 IST)
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்து ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழில் நடிகர் விஜய் கூட்டணியில் தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அட்லீ. தற்போது முதன்முறையாக இந்தியில் நடிகர் ஷாரூக்கானோடு இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் பெயர் “லயன்” என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகாத நிலையில் இதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
ஏற்கனவே சல்மான்கான் நடித்து வரும் படத்தின் பெயர் டைகர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஷாரூக்கான் படம் பெயர் லயன் என கூறப்படுவது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்