ட்ரிம் செய்யப்பட்ட மாவீரன் கிட்டு

வெள்ளி, 9 டிசம்பர் 2016 (10:30 IST)
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், பார்த்திபன் நடித்துள்ள மாவீரன் கிட்டு படத்தின் இரண்டாம் பகுதி ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

 
டிசம்பர் 2-ஆம் தேதி மாவீரன் கிட்டு வெளியானது. ஆதிக்க சாதிவெறிக்கு எதிரான படம் என பலதரப்பினராலும் படம் பாராட்டப்பட்டது. ஆனால், படத்துக்கு சுமாரான வரவேற்பே பார்வையாளர்களிடம் காணப்பட்டது.
 
இதன் காரணமாக படத்தின் இரண்டாம் பகுதியில் சுவாரஸிமற்ற பல காட்சிகளை வெட்டி எறிந்துள்ளனர். இப்போது படம், வேகமாக சுவாரஸியமாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்