உலக அளவில் டிரெண்டிங் ஆகும் 'கருத்த பெண்ணே'

திங்கள், 1 ஏப்ரல் 2019 (10:40 IST)
பிறமொழி ரசிகர்களையும் கவரும் வகையில் அவ்வப்போது  மலையாளத்தில் மிகச்சிறந்த பாடல்கள் வெளியாவது உண்டு. உதாரணமாக பிரேமம், பெங்களூரு டேஸ், சார்லி, களி போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.
 
இவை அனைத்தும் மலையாளத்தையும் தாண்டி உலக அளவில் மிகப்பெரிய அளவில் ஹிட்டானவை. அந்த வகையில் 2017ம் ஆண்டு வெளியான  வெளிப்படிந்தே புஸ்தகம் படத்தில் இருந்து ஜிமிக்கி கம்மல்  பாடல் மிகப்பெரிய அளவில் உலக ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.
 
தற்போது அந்த வரிசையில் 'கருத்த பெண்ணே' பாடல் சமீபகாலமாக  உலக அளவில் வைரலாகி வருகிறது.  இது 1994ம் ஆண்டு மோகன்லால்-ஷோபனா நடிப்பில் வெளியான 'தென்மாவின் கொம்பத்' என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் ஆகும்.
 
 இப்போது சமூக வலைதளங்களில் கருத்த பெண்ணே பாடல் வைரலாகக் காரணம் சனா பொய்டுட்டி. இவர் தான் 'கருத்த பெண்ணே' பாடலை கிளாசிக், இந்துஸ்தானி, பாப் என பல தளங்களோடு இணைந்து புது மெட்டு போட்டு வெளியிட்டுள்ளார். இந்த பாடல் யூடியூப்பில் 66 லட்சம் பார்வையாளர்களை கடந்து  போய்க்கொண்டு இருக்கிறது.  
 
மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான 'தென்மாவின் கொம்பத் படத்தை தழுவி தான் தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடிய ரஜினியின் முத்து படம் எடுக்கப்பட்டது. 
 
 
வீடியோ லிங்க்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்